மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் பேருந்து நிலையம் ஒன்றில் மத்திய வேளையில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். கர்ப்பமாக இருந்த அப்பெண் தனது செல்போனில் தனது அம்மாவுடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளை நிற சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் கீழே விழுந்த கர்ப்பிணிக்கு கருச்சிதைவு […]
