சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘திமுக ஆட்சிக்கு வந்தபிறகே ரவுடிகளை ஒடுக்கி, கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.திமுகவை சார்ந்தவர்களே தவறு செய்தாலும், ஏன் சிறிய குற்றம் இழைத்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அண்ணா, கலைஞர் மீது ஆணையாகச் […]
