காய்ச்சலால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய உதவ யாரும் முன்வராத செயல் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் சென்ற 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா […]
