Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடக்கடவுளே!”…. இப்படியா பண்ணுவீங்க?…. காங்கிரஸ் கட்சியின் செயலால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தண்டனை ஒன்றுதான்….!!” கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர்….!!

கொரோனா விதி மீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ அனைவருக்கும் சம அளவில் தான் தண்டனை  கிடைக்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 12 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் கர்நாடகா உள்ளது. அதனால், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையாக உள்ளன என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து அவர் கூறும்போது, கொரோனா விதிமீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! மனைவியின் பிணத்தின் மீது வாழ்ந்த நபர்…. திகிலூட்டும் சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொனகனூரில், நாகப்பா- சுமா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நாகப்பா ஒரு விவசாயி ஆவார். நாகப்பாவுக்கும் அவருடைய மனைவி சுமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாகப்பாவுக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம். அதனால் கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. ஜனவரி 19 வரை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசு இன்று முதல் ஜனவரி 19-ம் தேதி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் ஜனவரி 10-ஆம் தேதி காலை 5 மணி வரை இந்த வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. மாணவியின் ஆடைகளை களையச் சொல்லி துன்புறுத்திய தலைமை ஆசிரியை…. பரபரப்பு…!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகில் உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்போனைக் கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த தலைமையாசிரியர் சினேகலதா மனைவி தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் ஆடையை களைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியரின்  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. […]

Categories
அரசியல்

“தொடர்ந்து சரிந்து கொண்டே போகுதே”…. என்ன பண்ணலாம்…. திடீர் ஆலோசனையில் குதித்த கர்நாடகா பாஜக….!!!

கர்நாடகாவில் பாஜகவின் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டமானது, பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மேலவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக-விற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? என்பது தொடர்பிலும், கட்சியை பலமாக்குவது தொடர்பிலும் விவாதிப்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக 3 நாட்கள் கூட்டத்திற்கு கர்நாடகாவின் பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில், கட்சியை […]

Categories
அரசியல்

காவி வேட்டி, டி-சர்ட்டுடன்…. ராஜேந்திர பாலாஜிய அலேக்கா தூக்கிய காவல்துறை…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!

கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, அரசுத் துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானார். எனவே, காவல்துறையினர் அவரை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்காக 6 […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 50 பேர்…. மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பீரங்கனஹள்ளி கிராமத்தில் கங்கம்மா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சித்தரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர். அதில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கார், டாக்ஸி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தொற்று பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் எல்லாம் எங்களை கேள்வி கேட்க கூடாது….. விரட்டியடித்த கிறிஸ்தவ பெண்கள்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் கிறிஸ்துமஸை முன்னிட்டு வீட்டில் சிலர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மிரட்டிய பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்த ஆண்களை பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல ஊர்களில் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களில் இதுபோன்று அத்துமீறி நுழைந்து அதை தடுக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவிற்கு தக்க பதிலடி…. உருவானது காங்கிரஸ் அலை…. வெற்றிக்கான அறிகுறிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகளின்படி 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிற்கு 15 உள்ளாட்சிகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. மீதி உள்ள உள்ளாட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 501 இடங்களிலும், ஆளும் பாஜக 433 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 205 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு வாழனும்”…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம்  மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் தெரியவந்து பெற்றோர்கள் காதலரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு காதலன் ராஜேஷ் உயிரிழந்ததை அறிந்த இளம்பெண் சாந்தினி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தன் காதலன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு அப்பா செய்ற வேலையா இது”?…. மகளை போதைக்கு அடிமையாக்கி…. தந்தை செய்த கொடூர செயல்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள காட்டிப்பள்ளா பகுதியில் முகமது ஷெரீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழில் அதிபராக உள்ளார். இவர் தனது மகளுக்கு போதைப் பொருளை வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அலுவலகதிற்கு பெண் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மங்களூர் மாநகர காவல் ஆணையரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“சின்ன சண்டைக்கா இப்படி”…. உதட்டை கடித்து துப்பிய கொடூரன்….. பெரும் பரபரப்பு…..!!!

கர்நாடாக மாநிலம் பெங்களூர் சஞ்சய்நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலதிபர் கிருஷ்ணா வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இதைதவிர தொழிலாளியாக ஈசுவரப்பா என்பவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாவின் வீட்டில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் 3 பேரும் தங்களது அறையில் ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஈசுவரப்பா மேல் ராஜேஷ் தண்ணீரை […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது.

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 20 உலக நாடுகளுக்கும் மேல் இந்த தொற்று பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக இதுவரை 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழக எல்லைகள் அனைத்திலும் தீவிர கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

ஓமைக்ரான் எதிரொலி…. அடுத்த 10 நாட்களுக்கு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. தற்போது மத்திய பிரதேசம், குஜராத், அசாம், […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 33 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மது போதையில் டிரக் ஓட்டுநர்…. 2 குழந்தைகள் மற்றும் தாய் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்!!!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு டிரக் ஓட்டிய ஓட்டுனர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் மீது மோதியது. ட்ரக் மோதியதில் 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. முதல்வர் அளித்த விளக்கம்….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

149 மாணவர்களுக்கு கொரோனா…. மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்?…. புதிய பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேற்றை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகவில்  149 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒமிக்ரான் வைரஸ் தொற்றாக இருக்குமோ […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மீண்டும் பள்ளிகளை மூடும் திட்டம்…. அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கொரோனா தொற்று வருகிறது. அதில் குறிப்பாக சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரோன் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானம் நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசித் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக-கர்நாடக எல்லையில் குவிக்கப்படும் அதிகாரிகள்…. தீவிர கட்டுப்பாடு….  தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக கர்நாடகா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா- தமிழக எல்லை வழியாக வாகனங்களில் வருவோர் அனைவருக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழகம் வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கர்நாடகா எல்லைகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யாரையும் பரிசோதனை இன்றி தமிழகத்திற்குள் விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் பாதிப்பு…. இருவரில் ஒருவர் இந்த நாட்டை சேர்ந்தவராம்…. அரசு விளக்கம்…!!!!

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: இன்று இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர். அவருக்கு வெளிநாட்டு பயண தொடர்பு எதுவும் கிடையாது. இருப்பினும் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென உயர்ந்த தக்காளி விலையால்…. 2 பேர் பரிதாப உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்வத்ராவ் (55). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தக்காளியின் விலை திடீரென உயர்ந்ததால் தக்காளியை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த வசந்த குமார்(31) என்பவர் அந்த தோட்டத்தில் தக்காளியை திருட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வேலியில் சிக்கி கொண்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ச்சீ…! கோவிலுக்குள் போகக்கூடாது….. பிச்சை எடுக்கும் மூதாட்டி செய்த செயல்…. ஆச்சரியமடைந்த பக்தர்கள்…!!!

கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.  இந்தநிலையில் இந்த கோவில் முன்பு பிச்சை எடுக்கும் கெம்பஜ்ஜி(80) என்ற மூதாட்டி கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மூதாட்டியை, தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தான் கோவிலுக்கு நன்கொடை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பாத பக்தர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ…. ஏண்டா இப்படி பண்றீங்க…. 8 வயது சிறுமியை வாயில் துணியை வைத்து…. பரபரப்பு சம்பவம்….!!!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: கர்நாடகாவில் கனமழை பாதிப்பு…  நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…!!!

கர்நாடகாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணங்களை அறிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை…. ஆசன வாயில் சொருகப்பட்ட பொருள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…!!!!

கர்நாடக மாநிலதைச் சேர்ந்த கட்டடப் பணியாளர், தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கிம்ஸ் மருத்துமனையில் விநோதமான காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மலக்குடலின் உள்ளே கழிப்பறை நீர் ஜெட் ஸ்பிரே சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஜெட் ஸ்பிரேயை மலக்குடலில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சக பணியாளரிடம் விசாரித்த போது, அவர் குடிபோதையில் மலக்குடலுக்குள் அதைச் சொருகியதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்ற மனிதரின் இறுதி சடங்கில் 3,000 பேர்… இதுதான் காரணம்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பசவா (45)என்ற ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கில் 3000 பேர் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மனநிலை பாதிப்புடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். அவரது பின்புலம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. பொதுமக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டுப் பெறுவதை வழக்கமாக கொண்டவர். அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம். கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லரையை சரியாக அவர்களிடமே கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

புதையலை எடுக்க நிர்வாண பூஜை…. கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்…..!!!!

கர்நாடகாவில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி அதனை எடுக்க போலி சாமியாரால் நிர்வாண பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீனிவாஸ் என்பவர் வசித்து வரும் வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் புதையல் மறைந்து இருக்கு, அந்தப் பொக்கிஷத்தை வெளியில் எடுக்கவும். அதனை அப்படியே விட்டு விட்டால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்க தொடங்கும் என்று தமிழகத்தை சேர்ந்த ஷாஹிகுமார் என்ற போலி சாமியார் கூறியுள்ளார். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பேருந்துகளில்…. போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது…. அரசு உத்தரவு…..!!!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் அதிக சத்தம் வைத்து போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத வரும் பயணிகளை பேருந்திலிருந்து பாதையில் இறக்கிவிடலாம். இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்படி மேகதாது அணை கட்டுவோம்… உறுதியளித்த அமைச்சர் ஈசுவரப்பா….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணை பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியனர்  பாதையாத்திரை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் பேசிய கிராம வளர்ச்சி மந்திரி ஈஸ்வரப்பா, மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறவில்லை. எனவே அரசியல் நோக்கத்திற்காக இந்த பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளனது. அதனால் அவர்கள் பாதையாத்திரை நடத்தட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் எல்கேஜி, யுகேஜி-க்கு பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ…! இதற்காகவா இப்படி…? சிறுவன் மீது கொடூர தாக்குதல்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னடா மாவட்டம் குத்திகார் கிராமத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் அடிக்கடி திருட்டு போயுள்ளது. எனவே அந்த இடத்தின் உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடன் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாக்கு தோட்டத்தில் பாக்குகளை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு…. கர்நாடக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நாளை முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]

Categories
அரசியல்

முதல்வரின் சொந்த மாவட்டத்தில் தோற்ற பாஜக…. குஷியில் எடியூரப்பா கோஷ்டி…!!!

முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வி பெற்றது. இதனால் எடியூரப்பா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஆளும் பாஜக சிந்தகி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் எடியூரப்பாவுக்கு பெரிய முக்கியத்துவத்தை பாஜக தலைமை தரவில்லை என்பதால் தான் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாபஸ்…. சற்றுமுன் மாநில அரசு அறிவிப்பு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக அங்கன்வாடி மையங்கள் நவம்பர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது . மேலும் சமீப வாரங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

புனித் ராஜ்குமார் இல்லாமல் மக்கள் வாடுவார்கள்… கர்நாடக முதல்வர் பேட்டி …!!!

கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும் புனித் ராஜ்குமார் இழந்து பெரிதும் வாடுகிறார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வியாழனன்று புனித் ராஜ்குமார் கர்நாடக சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி என்னிடம் கேட்டார். நான் நவம்பர் 1ஆம் தேதி அந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறினேன். ஆனால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும், திரைப்படத் துறையினரும், சக நண்பர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுவர்களை கட்டிவைத்து பீடி பிடிக்கச் சொல்லி துன்புறுத்தல்”…. பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடுமை…!!!

கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த கும்பல் மாணவர்களை அழைத்து மரத்தில் கட்டி வைத்து வாயில் பீடியை பற்ற வைத்து கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

‘விதி ஒரு திறமையான நடிகரை பறித்துக்கொண்டது’… புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!!

திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்து விட்டது என்று புனித ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 46. இன்று காலை வழக்கம்போல் தனது உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித ராஜ்குமார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

பிரபல கன்னட நடிகர் மறைவு… திரையுலகிற்கு பேரிழப்பு… எம்.பி கனிமொழி இரங்கல்!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திமுக எம்பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் இன்று காலை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

தீராத வயிற்றுவலி… “பெண் வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா”…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.!!

குடகு மாவட்டத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் நாபோக்லு  கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மடிக்கேரி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து  அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அறுவை […]

Categories
தேசிய செய்திகள்

1 – 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. ஒரு வாரம் அரை நாள் மட்டுமே பள்ளி… மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா… டீசலுக்காக பேருந்தயேவா ஆட்டையை போடுவீங்க…. அதிர்ந்துபோன காவல்துறையினர்…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தை திருடி அதிலிருந்து டீசலை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமந்த ராயா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு அரசு பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் விடுதியில் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து காணவில்லை. இதையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒண்ணா… ரெண்டா… நிறைய சிக்கல் இருக்கு… தொடக்கப் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமா மாநில அரசு…?

கர்நாடக மாநிலத்தில் தொடக்கப்பள்ளி திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தொடக்க பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்று மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் 9 முதல் 12-ம் […]

Categories
தேசிய செய்திகள்

தொப்பி போட்டது ஒரு குத்தமா….? இஸ்லாமிய மாணவர்களை அடித்து உதைத்த இளைஞர்கள்… போலீஸ் அதிரடி..!!!

தனியார் பயிற்சி மையத்திற்கு தொப்பி அணிந்து வந்த மாணவர் ஒருவரை தாக்கிய பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாகல்கோட்டில் கடந்த திங்கள்கிழமையன்று தனியார் பயிற்சி மையத்திற்கு வந்த இஸ்லாமிய மாணவர் ஒருவர் தொப்பி அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சில மாணவர்கள் அவரை தொப்பியை கழற்றுமாறு மிரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கப்பட்ட மாணவர் இக்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories

Tech |