Categories
தேசிய செய்திகள்

“ஏய் கோழி குழம்பு வச்சு தா”…. மனைவியை கொன்ற கணவர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!

கோழி குழம்பு வைக்க வில்லை என்ற காரணத்தினால் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகரே  ஹரிஹரன் பன்னிக்கோடு  கிராமத்தில்  கெஞ்சப்பா(34) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி ஷீலா(28). 9 வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில்  மது போதைக்கு அடிமையான கெஞ்சப்பா தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…? பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த 4 நாட்களுக்கு அதீத கனமழை…. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….!!!!

கர்நாடக மாநிலத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாத நிலையில்,கர்நாடகாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சற்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்…. காரணம் என்ன தெரியுமா…?

நடுரோட்டில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும்‌ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சில பேர் பள்ளியிலிருந்து வெளியே வரும் போது கடுமையான வாக்குவாதம் செய்து கொண்டே வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான கொடுமை…. முதலிடத்தில் கர்நாடகா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தேசியக் குடும்ப நலத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய கலாச்சாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, அதன் பின் இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் படலம் நடைபெற்று, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றது. அதாவது வரதட்சணை பிரச்சனை, மாமியார் – […]

Categories
தேசிய செய்திகள்

“அதற்கு நான் ஆதரவு வழங்குவேன்”… ஒலிபெருக்கிகளை நீக்கவேண்டும்…. கர்நாடக எம்எல்ஏ வலியுறுத்தல்…!!!!!

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என அம்மாநில எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்தனால் எம்எல்ஏ விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி முதல்-மந்திரி பசவராஜ் கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச மாதிரியில் இங்கு  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவர…. மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம்… எங்கு தெரியுமா…?

கர்நாடகாவில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற நிலையில் குளுமையான சுற்றுலா தளங்களை தேடி மக்கள் செல்கின்றனர். இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மால்பே  கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரர்கள்…. உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்….!!!!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள தக்சின கன்னடா மாவட்டத்தில் கிராம வாசிகள் 9 பேர் பழங்குடி பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெத்தலகண்டி தாலுக்காவைச் சேர்ந்த குரிபல்லா எனும் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா போன்றோர் மீது 35 பழங்குடி பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் கொண்டு வர உத்தரவு…. கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் பெங்களூரு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் எடுத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்டதாகவும், ஆன்மீக கருத்துக்கள் மற்றும் நன்நெறி போன்றவற்றை மாணவர்களுக்கு போதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியின் இந்த உத்தரவுக்கு இந்து, வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சில அமைப்புகள் இந்த உத்தரவு கர்நாடகா கல்வி சட்டத்திற்கு எதிரானது என்று புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. அதிகரிக்கும் இணையவழி மோசடி…. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்….!!!!

கர்நாடகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை சுமார் ரூ. 221 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி நடந்துள்ளது. ஆனால் ரூ. 40 கோடி மட்டுமே இணையவழி மோசடியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் ரூ. 104 கோடியை சைபர் மோசடி மூலம் இழந்துள்ளனர். அதிலிருந்து ரூ.24 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.68 கோடி ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ரூ. […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மே 16ஆம் தேதி முதல் திறப்பு…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!

அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று  பரவிவருவதன் காரணமாக  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின்   நான்காவது அலை ஜூன் மாதத்தில் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று பி.யூ.சி பொதுத்தேர்வு… ஹிஜாப் அணிய தடை… அரசு உத்தரவு…!!!!!

கர்நாடகாவில் பி.யூ.சி  இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிற நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. இந்த தேர்விற்க்காக  மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதும்போது மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“காசி புனித யாத்திரை செல்லும்….. 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி”….. மந்திரி சசிகலா ஜோலே தகவல்….!!!!

காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடகத்தில் வன்முறையாளர்கள் வீடுகள் இடிக்கப்படுமா”?….. முதல்வர் பசவராஜ் பொம்மை பதில்….!!!!

கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். அப்போது வட மாநிலங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை “வன்முறையில் ஈடுபடுபவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வன்முறை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை தொடங்குகிறது….பி.யூ.சி 2ம் ஆண்டு பொதுத் தேர்வு…!!!!!!!

கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல்  தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகாவில்  உள்ள  பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம்  என்று […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பெய்த கனமழை…‌ வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்… சிரமத்தில் மக்கள்….!!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி போன்ற  பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானனர் . பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

சன்னி லியோனின் தீவிர ரசிகரா நீங்கள்…..? அப்ப இந்த தள்ளுபடி உங்களுக்குதான்….!!!!

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு இந்தியை தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழிலும் சன்னி லியோன் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவன் Dk என்ற பெயரில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நபர் சன்னி லியோனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் விற்கப்படும் கோழி கறிகள் வாங்கும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10% தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“காண்டிராக்டர் தற்கொலை வழக்கு”…. பதவி விலக முடிவெடுத்த மந்திரி…. வெளியான தகவல்…..!!!!!

கர்நாடகாபெலகாவி மாவட்டத்திலுள்ள இந்தலகா கிராமத்தில் காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் வசித்து வந்தார். மேலும் ஆளும் பா.ஜ.க. தொண்டராகவும் இருந்துள்ளார். சென்ற வாரம் இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். இதையடுத்து பாட்டீலின் போனை ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினர் விசாரித்து வந்த சூழ்நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்துகழக பேருந்து நிலையம் அருகில் சாம்பவி லாட்ஜில் அவர் மரணமடைந்து கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சார விடுதியில் இவர்களை கைது செய்ய கூடாது”….. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

விபச்சார விடுதியில் சோதனை செய்யும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. விபச்சார விடுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தும்போது வாடிக்கையாளர்களை கைது செய்கின்றனர். அப்படி வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் கைது செய்தது தவறு என்று கூறி பெங்களூரை சேர்ந்த பாபு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி”…. முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள்….!!!!

கர்நாடகாவில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று எழுந்த எதிர்ப்பு தற்போது அடுத்த கட்டங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும், அனைத்து மக்களும் சமம் என்றும் கூறியுள்ளார். எப்போது முதல்வரை சந்தித்தாலும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே அறிவுறுத்துவேன். முஸ்லிம்களும், இந்துக்களும் ஒரு தாய்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்ததாரர் இறப்பு…. மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் முழுகாரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்…..!!!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற சில மாதங்களுக்கு முன் மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் விவகாரத்தில் 40 % கமிஷன் கேட்கிறார் என பரபரப்பு பேட்டியளித்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது மந்திரி ஈஸ்வரப்பாவின் தொல்லையால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளப் […]

Categories
தேசிய செய்திகள்

161 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை…!! பிரதமர் மோடி திறந்து வைத்தார்…!!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள பசவேசுவரா மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ராமநவமி நாளான இன்று காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த சிலை தமிழகத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகாவில் ஏசி வெடித்து 4 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி…. உயரும் மதுபான விலை?…. அரசு அதிரடி முடிவு….!!!!

கர்நாடகாவில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போது மது பானங்களுக்கு எந்தவிதமான வரியையும் உயர்த்தவில்லை. பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை கர்நாடகாவில் உயர்த்தப்படாத என்று கலால் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்துவதற்கு பீர் நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

கர்நாடக ஹிஜாப் பிரச்சனை…. அல்கொய்தா அமைப்பின் தலைவர் பேசிய வீடியோ…!!!

அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அல்கொய்தா என்ற உலக தீவிரவாத அமைப்பின் தலைவரான ஜமான் ஸவாஹிரி பேசிய வீடியோவில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியவாறு வந்த கும்பலை எதிர்த்து அல்லாஹுஅக்பர் என்று முழக்கமிட்டு சென்ற மாணவியை பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் உன்னத பெண் என்று முஸ்கானை பாராட்டியிருக்கிறார். மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துபோனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் ஈரோடு மாவட்டத்தில் கூலி தொழிலாளி மூர்த்தி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று மூர்த்தி பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன்கள் கார்த்தி மற்றும் பிரபு குமார்  பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த பரபரப்பு!… இஸ்லாமியர் கடையில் இறைச்சி வாங்க கூடாது…. இந்து அமைப்பினர் பிரசாரம்…..!!!!!

கர்நாடகா மாநிலம் பத்ராவதி பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் மதத்தினர் கடைகளில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக் கூடாது என்று பஜ்ரங்தள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகக் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் அப்போது இறைச்சி கடை வைத்திருந்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஷிவமோகா மாவட்டத்தில் உணவுக்கடை வைத்து இருந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

OMG: கர்நாடகாவில் அடுத்த பரபரப்பு…. முதல்-மந்திரி விடுத்த வேண்டுகோள்…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. இதையடுத்து கர்நாடக அரசின் இந்த உத்தரவை உறுதி செய்து அம்மாநில ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதன்பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிவடைந்து சற்று அமைதி திரும்பியது. இந்நிலையில் இந்து கோவில்கள் கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல் மந்திரி பி.எஸ் எடியூரப்பா மீது எப்.ஐ.ஆர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு……!!!!!

கர்நாடகா மாநிலம் முன்னாள் முதல் மந்திரி பி.எஸ் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சிறப்பு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய  பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான நில மறுமதிப்பீடு விவகாரம் பற்றி லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. Karnataka | A Special court at Bengaluru has ordered to register a 'special […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பேருந்து அடியில் சிக்கிய கார் … 5 மாணவர்கள் உயிரிழப்பு…!!!!

பேருந்துக்கு அடியில் கார் சிக்கிய கோர விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தது.இதில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதிக்  கொண்டது.இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த அனைத்து  மாணவர்களும்  […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தனது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்…. மாநில கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.  கர்நாடக பள்ளிக்கல்வித் துறை மந்திரி பி.சி நாகேஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலங்களாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் அவர்  […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது… அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவரான வருத்தம் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கலோரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. கர்நாடக உயர்நீதிமன்றம், வெளியிட்ட தீர்ப்பில், ஹிஜாப் பிரச்சனையில் அரசாங்கம் பிறப்பித்த ஆணை, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் விவகாரம்….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு……!!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவிலுள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ- மாணவிகள் சீருடையை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலபேர் சீருடையின் மேல் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தால், அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அந்த கல்லூரியில் பயிலும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவிலுள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ- மாணவிகள் சீருடையை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலபேர் சீருடையின் மேல் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தால், அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அந்த கல்லூரியில் பயிலும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு…. பெங்களூருவில் 144 தடை உத்தரவு…!!!

ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவிலுள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ- மாணவிகள் சீருடையை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலபேர் சீருடையின் மேல் ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தால், அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் அந்த கல்லூரியில் பயிலும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்துக்கு மறுத்த பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து…!! கர்நாடகாவை உலுக்கும் ‘லவ் ஜிகாத்’…!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதாகும் அபூர்வா பூரணிக். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு 30 வயதாகும் ஆட்டோ ஓட்டுனர் முகமது அசாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிராமண குடும்பத்தில் பிறந்த அபூர்வா முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமதுவை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெற்றோர் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் தங்களுடைய ஒரே மகளான அபூர்வாவை ஆட்டோ ஓட்டுனர் முகமதுவுக்கு திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

6 வருஷத்துக்கு பின் தாயுடன் மகன்…. ஆதார் கார்டுக்கு தான் நன்றி சொல்லணும்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஆதார் கார்டு மூலமாக தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்குமார் என்ற ஒரு சிறுவன் 2016 ஆம் ஆண்டு தனது தாய் பர்வதம்மாள்  சந்தைக்கு காய்கறிகள் விற்க வந்த போது காணாமல் போயிருக்கிறார். இது பற்றி எலஹன்ஹா காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால் குழந்தை காணாமல் போனதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் பரத்  காணாமல் போன நாளிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடக அரசை கண்டித்து… மார்ச் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… டி.டி.வி தினகரன்…!!

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சமூகநீதி பேசுபவர்களை வாக் வாங்குவதற்காக ஜாதி பிரிவை தூண்டி பிரிவினை ஏற்படுத்த நினைக்கின்றீர்கள் என குற்றம்சாட்டி அவர், உடல் நலக்குறைவால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதா மரணம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.

Categories
அரசியல்

“எங்கள மீறி ஒன்றும் செய்ய முடியாது…!!” சவால் விட்ட அமைச்சர் துரைமுருகன்…!!

கர்நாடகாவில் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தொடரின்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது. 05.02.2007 அன்று […]

Categories
தேசிய செய்திகள்

1,000 கோடி நிதி ஒதுக்கீடு…. கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு…. எதற்காக தெரியுமா…???

மேகதாது அணை திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில்  ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் ஷாக்…! தூக்க கலக்கத்தில் பல் துலக்கிய மாணவி…. உயிரே போன பரிதாபம்…!!!

கர்நாடகாவில் எலி மருந்தால் பல் துலக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா  மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷர்வயா. கடந்த 14ஆம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இவர் தூக்க கலக்கத்தில் எழுந்து பல் துலக்குவதற்காக அவரது பிரஷ்சை  எடுத்து பேஸ்ட்டை அப்ளை செய்துபல் துலக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அதன் சுவையை உணர்ந்த ஷர்வயா இது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து  அது என்ன என்பதை பார்த்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“நம் தேசிய கொடியால் தான் உயிர் பிழைத்தேன்” இந்திய மாணவர் பேட்டி…!!!!

கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்திய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் முகமது ஹபீப்  அலி. உக்ரைனில் சிக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பத்திரமாக கர்நாடகா திரும்பியுள்ளார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உட்பட பல […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகும் கோடை காலத்தால்…..!! மீண்டும் மின்வெட்டு அமல்…?? அதிர்ச்சியில் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் தினசரி மின் தேவை நாளொன்றுக்கு 7,193 மெகவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் அனைத்து ஆதாரங்கள் மூலம் மொத்தம் 4,136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் 8 மின் உற்பத்தி அலகுகள் மூலம் 1,720 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 அலகுகளில் தான் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நான்கு அலகுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது…? மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைகிறது. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 1 ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை ஆண்டு தேர்வு நடத்த வேண்டும். மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட முடிவு வேண்டும் எனவும் […]

Categories
அரசியல்

“வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவு …!!” தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த சித்தராமையா…!!

பிரதமர் மோடிக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. அரசின் வருமானத்தை அதிகரிப்பதிலும் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள அரசின் பணத்தை திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளார். 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி வங்கிகளை அரசுடமையாக்கினார். இதனால் பலதரப்பட்ட மக்களும் தனியார் வங்கிகளால் பாதிக்கப்படுவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி ப்ளான்….!!!!

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4,000 ஏக்கர் நிலம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரம் இந்தியர்களுக்கு பெரிய அளவில்  வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு ஐ.டி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் கர்நாடகத்திற்கு வருவாய் பெருகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: போராடிய பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்…. 6 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்துள்ளது அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியதால் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பதற்றம்: பிப்-26 வரை ஊரடங்கு நீட்டிப்பு… மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் காரணமாக அம்மாநில அரசு ஊரடங்கு பிப்ரவரி 26 வரை நீட்டித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் போராட்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |