Categories
தேசிய செய்திகள்

ராமர் பக்தரான முஸ்லிம் முதியவர்… ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயம்… குவியும் பாராட்டு…!!!

கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயத்தை எழுதி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாகோந்தி என்ற கிராமத்தில் 97 வயதுடைய பாட்சா சாப் என்பவர் வசித்து வருகிறார். தேசத் தியாகிகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பத்ராஞ்சலில் இருக்கின்ற ஒரு சிவன் கோயிலுக்கு இவர் சென்றுள்ளார். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் மங்களூர் பீச் திறப்பு… அலைமோதிய மக்கள் கூட்டம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் சுற்றுலா வாசிகள்…!!!

கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பீச் பல மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் அங்கு திரண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து பீச்களுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பணம்பூர் பீச் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக கடல் காற்றை சுவாசிக்க அமலில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் பீச்சில் திரண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி அரசியல் செய்யும் எடியூரப்பா… பலியாகும் மக்கள்… டி.கே.சிவகுமார் கண்டனம்…!!!

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஆர்ஆர்நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவின் சேர்ந்தால் முனி ரத்னா மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கணவர் செய்த கேவலமான செயல்….. போலீசில் புகார்…!!

சந்தேக புத்தி கொண்ட கணவர் தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் ஹரிகிருஷ்ணா. திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் ஹரிகிருஷ்ணா மனதில் தேவிகா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் கணவர் தேவிகா குளிப்பது, உடை மாற்றுவது போன்ற காட்சிகளை […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு போன 20வயது இளம்பெண்…. செல்லும் வழியில் மகள் செய்த செயல்… மொத்த குடும்பமும் ஷாக் …..!!

குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு …!!

கர்நாடகாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 4,471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 7,98,378 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 52 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10,873 ஆக உயர்ந்தது. மேலும் 7,153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதுவரை 7 லட்சத்து 737 பேர் குணமடைந்து உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,417 பேருக்கும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள்…!!

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பெங்களூருவில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொம்மனஹள்ளி, பேயூர், மடிவாளா, ஜெயநகர், சாந்திநகர், ராஜாஜி நகர் அப்பால், லால்பாக், மைசூர் சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா…!!

கேரளாவில் இன்று மேலும் 8,511 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 95 ஆயிரத்து 657 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 லட்சத்து 80 […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா வெளியே வரப்போறாங்க… இதுதான் காரணம்… வழக்கறிஞர் அளித்த பேட்டி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் வி.கே. சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வரலாம் என்று அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே. சசிகலா, கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், ” இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா வெளியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர்-புதுச்சேரி போக்குவரத்து சேவை… நாளை முதல் இயங்கும்… கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அனைத்து அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து…!!

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து. கர்நாடக மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபோரின் டிரைவிங் லைசன்ஸ், மூன்று மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், இதனை மீறுவோருக்கு அபராதம் தொகையுடன் மூன்று மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வீடு இல்லாத மக்கள்… அனைவருக்கும் இனி வீடு… எடியூரப்பா புதிய அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வீடுகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் மூலமாக சிவமொக்கா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர், ” கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… 10 கிலோ அரிசி இலவசம்… கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்…!!!

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, தனது தொகுதி பாதாமியில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு பேசியவர், “ஏழை மக்கள் எவரும் உணவு இன்றி பசியால் வாட கூடாது. அவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 நிவாரணம்…!!

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, தெலாகாபி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லையைத் தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடல்… அடக்கம் செய்ய பணம் இல்லை… மகன்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா? …!!!

பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

80 அடி உயர நீர்வீழ்ச்சி… மலையேறிய தமிழக மாணவர்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் 80 அடி உயர நீர் வீழ்ச்சியில் சிக்கிக் கொண்ட தமிழக மருத்துவ மாணவரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா மாவட்டம் ஓசநகர் தாலுகாவில் கொடசாத்திரி மலை அமைந்துள்ளது. அங்கு ஹிட்லமனே என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியின் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதனால் தினந்தோறும் அதனைக் கண்டு களிக்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் சிலர் சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சியில் ஏறி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்க உள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக அதிக அளவு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,70,604 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

ஆறு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறப்பு…!?

கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று திரையரங்குகளை திறக்க  மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்படாது எனவும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவர் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அனுமதி… திறக்கப்பட்ட திரையரங்குகள்… கர்நாடகாவில் கூடும் கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “திரையரங்குகளை சானிடைசர் மூலமாக அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை …!!

ஆந்திரா கடற்கரையை மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்ததால் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 20 சென்டி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவற்ற ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே நேற்று கரையை கடந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிளாட்பார்மில் உறங்கிய குடும்பம்… 4 வயது சிறுமி… பாலியல் வன்கொடுமை… போலீஸ் பிடியில் சிக்கிய குற்றவாளி…!!!

கர்நாடக மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அங்கு வசித்து வரும் அந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவர்கள் அங்கு பொம்மை வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளனர். கடந்த பத்தாம் தேதி கொட்டி தீர்த்த கன மழையால் அவர்கள் தங்கியிருந்த கொட்டகை நீரில் மூழ்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 7 லட்சத்தை எட்டும்… கொரோனா பாதிப்பு… திணறும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,523 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,786 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,966 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மூன்று வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு நாளை முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெலகிரி மாவட்டத்தில் அரசின் விட்டியகாமா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டு வந்தது. இதில் 24 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கு… வசூலிக்கப்பட்ட அபராதம்… நான்கு மாதத்தில் இவ்வளவா?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..!! இன்று முதல் 3 வாரம் கிடையாது…. வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!!

இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது கர்நாடகா மாநில கல்வித் துறை இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தசரா விடுமுறைகளை ரத்து செய்யப்போவதாக 10 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாநில அரசு மூன்று வார விடுமுறையை அறிவித்துள்ளது பல ஆசிரியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உலக பிரியாணி தினம்… பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர்… கடையில் கூடிய கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிரியாணி தினத்தை முன்னிட்டு ஒரு கடையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசையில் நின்று மக்கள் பிரியாணி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கின்ற ஹோஸ்கேட் என்ற நகரில் ஆனந்தம் பிரியாணி கடை இருக்கின்றது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான பிரியாணி கடை அது. அந்த கடையில் தயார் செய்யப்படும் பிரியாணி மிகுந்த சுவை என்பதால் அங்கு எப்போதும் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.மக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக வாரத்தின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மீது அக்கறை இருக்கா…? இதை மட்டும் பண்ணாதீங்க…. எச்சரிக்கும் முன்னாள் முதல்வர்…!!

மக்கள் மீது அக்கறை இருந்தால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் கர்நாடகாவில் இருக்கும் உயர்நிலை பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கல்பர்கி மாவட்டத்திலிருக்கும் டியூசன் சென்டரில் படித்துவந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பான […]

Categories
உலக செய்திகள் கொரோனா

24 மாணவர்களுக்கு கொரோனா-அதிகாரிகளை முற்றுகையிட்ட பெற்றோர்…!!

கர்நாடகாவில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மேளகாவி மற்றும் கலப்பூரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயின்று வந்த 24 மாணவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை பெற்றோர் முற்றுகை இட்டனர். கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை […]

Categories
தேசிய செய்திகள்

காலை சுற்றிய மலைப்பாம்பு…. துணிந்து போராடிய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தனது காலை சுற்றிய மலை பாம்பிடம் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் போராடி தப்பித்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் ஊர்வா என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் சங்கல்ப் ஜி பாய். புதன்கிழமை அன்று சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த கோயிலுக்கு சென்று இருந்தார். அப்போது கழிவுநீர் குழாயில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து சிறுவனின் காலைக் கவ்வி பிடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுவன் உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளான். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு… வெளியாகும் வதந்திகள்… உண்மை என்ன?… எடியூரப்பா விளக்கம்…!!!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு பற்றி எழுந்துள்ள தகவல் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை. அதனால் பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 7 லட்சத்தை எட்டும்… கொரோனா பாதிப்பு… திணறும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. என்று மட்டும் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவை பார்க்கணுமா… அப்போ இது கட்டாயம் செய்யனும்… அரசு அதிரடி உத்தரவு…!!?

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் என அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருகின்ற அதிகாரிகள் உட்பட எவராக இருந்தாலும் கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டும்…. எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்…

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் கர்நாடகாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கர்நாடகாவின் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்… எடியூரப்பாவிற்கு முதல்வர் பழனிசாமி கடிதம்…!!!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திரும்பத் திறக்கக் கோரியும் ,தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரியும்  தமிழக முதலமைச்சர், எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக கர்நாடகாவில் பல தமிழ்வழி கல்வி பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் தற்போது புதிதாக தமிழ்ப் பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையெனவும் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கர்நாடகாவில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கபடுமா?… முதல்-மந்திரி… இன்று ஆலோசனை கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா வரும் இவர்களுக்கு…. கொரோனா பரிசோதனை கட்டாயம்… மந்திரி சுதாகர்… அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். குடகு மாவட்டத்தை பார்வையிடுவதற்கு நேற்று மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் சென்றிருந்தார். அங்கு மடிக்கேரியில் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் குடகு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தாயைப் பிரிந்த குட்டி யானை சாப்பிட மறுத்து கண்ணீர்…!!

கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூர அருகே தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை சாப்பிட மறுத்து கண்ணீர் விடும் சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்கிறது. ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர அருகே உள்ள மணலி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இந்த கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசம் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக பிறந்த குட்டி யானைக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த குட்டி யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் வனத்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளதொடர்புக்கு தடை” கர்ப்பிணியை துடிக்க துடிக்க கொன்ற பெண்…!!

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் காதலனின் கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு கங்கப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கப்பாவின் பெற்றோர் ஒரு வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணை கங்கப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு கங்கப்பா கல்பனாவுடன் இருந்த உறவை கைவிட்டுள்ளார். இதனால் கல்பனாவிற்கு ரோகினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தனக்கும் கங்கப்பாவிற்கும் இடையில் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா… மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம்… பள்ளிக்கல்வித்துறை…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது.அதில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து தங்களின் படிப்பு குறித்த சந்தேகங்களை ஆசிரியர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கா?… கட்டாயம் கொரோனா பரிசோதனை…. கர்நாடக சுகாதாரத்துறை… அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ளார். கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் கொரோனா குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் மூச்சுத்திணறல், காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் மருத்துவ மையங்களுக்கு வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவ மையங்கள் மார்பில் சளி மாதிரியை சேகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மூட நம்பிக்கையால் ஏற்பட்ட சோகம்..! 3 நாட்கள் சாப்பிடவில்லை… பேய் பிடிச்சிருக்கு… பெற்றோரால் பறிபோன குழந்தை..!!

பேய் விரட்டுவதாக கூறி 3 வயது குழந்தையை பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரவீன்-சியாமளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பூர்விகா என்ற  மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பூர்விகா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவர்களது பகுதியில் இருந்த சவுடாம்மன் கோவில் பூசாரியான ராகேஷ் என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். ராகேஷ் குழந்தைக்கு பேய் […]

Categories
தர்மபுரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 9,894 பேர் பாதிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 9,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,59,445 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவால் அடிக்கடி சண்டை… “கணவனை கொன்றுவிட்டு”… தப்பிச்சென்ற மனைவி..!!

கர்நாடக மாநிலத்தில் மனைவியே தன் கணவரை மரக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி என்ற மாவட்டத்தில் பெல்காம் அருகே உள்ள அஞ்சனா என்ற கிராமத்தில் சச்சின் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அனிதா வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்துள்ளார். அதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வழக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

டார்ச்சர் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள்… “வேலையே வேண்டாம்”… ஆட்டோ ஓட்டும் டாக்டர்… போன் போட்ட அமைச்சர்..!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் வேலையை விட்டு விட்டு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிம்ஸ் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் தாவணகெரே மாவட்டம் பாடல் கிராமத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை கொரோனா சிறப்பு வார்டில் தினந்தோறும் பணியாற்றும்படி அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

22 வயது இளைஞனை… 6 ஆவது கல்யாணம் செய்துவிட்டு… ஸ்டேஷனுக்கு சென்றப்பெண்… பின் நடந்தது இதுதான்..!!

 5 கணவன்களை உதறிவிட்டு 6ஆவது கணவருடன் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் இருக்கும் கச்சினஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு.. இவருக்கு வயது 22 ஆகிறது.. இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நானும், இந்த பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளோம்.. எங்களது கல்யாணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அதுமட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுப்பதால், எங்களுக்கு உரிய […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் இழப்பை ஈடுகட்ட பார்கள் திறப்பு… கலால்துறை மந்திரி…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் திறக்க உள்ளதாக கலால் துறை மந்திரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊர் அடங்கிய சில தளர்வுகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபான கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இருந்தாலும் கொரோனா அச்சத்தால் குடிமகன்கள் யாரும் மது வாங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?… கர்நாடக மக்கள் அச்சம்…!!!

கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 93 பேர் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில்… மேலும் ஒரு எம் எல் ஏக்கு கொரோனா… இதுவரை 40 மக்கள் பிரதிநிதிகள் பாதிப்பு….!!

கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சென்ற மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. சென்ற ஒரு வார காலமாக 7 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா உறுதி…!!!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,03,200 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோணா பாதிப்பிலிருந்து 1,26,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் […]

Categories

Tech |