Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பரபரப்பு.! வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து…. பலர் படுகாயம்..!!

கர்நாடகா சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம், கர்நாடக மாநிலத்தில் அது கார்த்திகை மாத திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக அங்கு தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டு சுவாமிக்கு வெறும் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டது. அதிலும் அந்த கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியை கொடூரமாக கொலை செய்த கும்பல்…. மாநிலம் முழுவதும் பதற்றம்…..!!!!!

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு நேற்று இரவு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் பைக்கில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெல்லாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: லாரி- பேருந்து மோதல்….. 7 பேர் பரிதாப பலி….!!!

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி அருகே லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி முயற்சி….வெளியான பகிரங்க குற்றச்சாட்டு…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து,பாட்டீலின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN : இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை…. நீடிக்கும் பதற்றம்…. 144 தடை அமல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஆவார். ஹர்ஷா நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 14) முதல் கர்நாடகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கர்நாடகா  மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து மாநில அரசு  உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நிலையில் நுழைவாயிலில்  தடுத்து நிறுத்தப்பட்டன. இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…. கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி….!!!

வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா….  மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதையடுத்து அடுத்தடுத்து மாணவர்களுக்கு தொற்று உறுதியாவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கவும் , ஒமிக்ரான் தொற்று காரணமாகபல்வேறு  கட்டுப் பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

எதிரெதிரே மோதிய வாகனம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் என்ற பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகாக்லோட் என்ற பகுதியிலிருந்து பசவராஜ் என்பவர் தனது மனைவியின் தங்கை மற்றும் மகன் ஷரத் ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… ரயிலில் கொண்டு வந்த பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸில் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது எஸ் 9-வது பெட்டியில்  திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும் எஸ் 7-வது பெட்டியில் திருவாரூரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு… திருமண வாழ்வில் பங்குகொடுத்த தங்கை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கர்நாடகாவில் மாற்று திறனாளியான அக்காவிற்கு தன் திருமண வாழ்வில் பங்களித்த தங்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள வேகமடுவே கிராமத்தில் சுப்ரியா என்ற வாய் பேச முடியாத இளம்பெண் தனது பெற்றோருடன் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து அவரின் தங்கையான லலிதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமாபதி என்ற நபருடன் திருமணம் நிச்சயமாகி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தேதி வரை…. மூன்று வேளையும் இலவச உணவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோன மரணங்களை வெளிச்சம்போட்டு காட்டும் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டுகள்… அதிர்ச்சியில் மக்கள்…!!

கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு இடுகாட்டில், ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்த உடல்களை எரிக்க இடமில்லாமல் தவிக்கும் அவலம் நிலவுகிறது.குறிப்பாக பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு… முழு ஊரடங்கு அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 29 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 4 ஆயிரத்து 397 […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு தொகையா..? ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்.. 3 வருட முயற்சிக்கு கிடைத்த பரிசு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த நபருக்கு 24 கோடி லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  கர்நாடகாவில் உள்ள சிவமோகா என்ற மாவட்டத்தை சேர்ந்த சிவமூர்த்தி கிருஷ்ணப்பா என்பவர் கடந்த 15 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரியை கடந்த மூன்று வருடங்களாக கிருஷ்ணப்பா தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். தனக்கு ஒரு நாளாவது பெரிதாக அதிர்ஷ்டம் அடித்து விடாதா, என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகவில் நவ.17ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன …!!

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 81 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் கடந்த 17-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாவலான 17-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகை இருந்தது. பிற மாவட்டங்களில் சில கல்லூரிகள் தவிர பெரும்பான்மையான கல்லூரிகளில் 60 முதல் 80 சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

காய்கறிகளின் விலை உயர்வு – மேலும் உயரும் என வியாபாரிகள் தகவல்

கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொடர் மழை மற்றும் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் காய்கறிகளின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் முடிந்தும் காய்கறிகளின் விலை குறைவு என எதிர்பார்த்த நிலையில் கடந்த சில தினங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயம் தக்காளி கேரட் பீட்ரூட் பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. கர்நாடகா […]

Categories

Tech |