சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில் வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]
