கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடியில் தவசிமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜெயராஜ்(41) என்பவருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் தவசிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தவசிமணி கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் படுகாயமடைந்த […]
