திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன் திருமாவளவனின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை பாஜக ஏன் கொண்டாடவில்லை?.. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியாச்சு.. ஆட்சிப் பணி நியமனமும் கொடுத்தாச்சு… […]
