கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும், இதன் நன்மைகள்: கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. […]
