மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் […]
