தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]
