கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராதவிதமாக இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படுகின்ற வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி கொடுக்கவும், நிலையான வருமானம் கிடைப்பதற்கும், விவசாயத்தை நிலைபெறச் செய்வதற்கும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் […]
