ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பெருந்துறை தீயணைப்புநிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் […]
