சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இரண்டு ஏக்கர் அளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் சென்ற இரண்டு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனிடையே சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம் பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் உடைந்து […]
