சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சூ நகருக்கு சென்ற மாதம் 21ஆம் தேதி புறப்பட்டது. இந்த நிலையில் குவாங்சூவிலுள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 123 பயணிகள், 9 ஊழியர்கள் என்று 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில், விமானத்தின் கருப்புபெட்டிகளை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய […]
