கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து […]
