வலதுசாரியை சேர்ந்த எம்.பி. கிரிகோயர் “நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்” என்று கத்தினார். புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்களை ஏற்றிச்சென்ற ஒரு கப்பல், பிரான்ஸ் அருகே மத்தியதரைக் கடலிலுள்ளது. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வந்துள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் விவகாரம் பற்றி இடதுசாரியை சேர்ந்த கறுப்பின எம்.பி கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ பேசினார். […]
