தேன் கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]
