இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் கருணாநிதி. திமுக என்ற கட்சியின் வாயிலாக மாநில சுய உரிமைக்காக தொடர்ந்து மத்திய அரசுடன் போரிட்டவர். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரின் போராட்ட வாழ்வைப் பற்றி இத்தொகுப்பின் மூலம் காணலாம். கடந்த 1924ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேல், அஞ்சுகம் அம்மாள் தம்பதிக்கு நன்மகனாய் தோன்றிய தட்சினாமூர்த்தி, பின்னாளில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கும் அரசியல் தலைவர் கருணாநிதியாக உருவெடுக்க […]
