ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறும் என்றும் அவரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார். […]
