கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று கர்ப்பிணியாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ […]
