கருகலைப்பு செய்யும் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் பாண்டிய பாபு என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும். 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்திராணி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்காக அரண்மனைபுதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கருவின் வளர்ச்சி குறைவாக […]
