100ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கால பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் கோ பூஜையுடன் பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. சாளகிராமம் அடங்கிய திருப்பேழைப் பெட்டி மற்றும் புனித […]
