கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். திருவண்ணாமலையில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதின்நிதின் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும், யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து அதே வகுப்பில் படிக்கும் ஸ்ரீநாத் என்ற […]
