மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” […]
