ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், தொம்பக்குளம், கோடாங்கிபட்ட, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கம்பு பிராய்லர் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து விவசாயி வேல்முருகன் கூறியபோது, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. […]
