பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]
