தேர்தல் வாக்காளர்களை கவர இலவசங்களை தருவதாக சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாகவும், இந்த இலவச கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியிருந்தார். இது பற்றி விவாதம் நடத்துவது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இலவச வழங்கும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. […]
