கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]
