இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிரதமர்மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் “எழுபது ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இருந்து வந்த 2ஆம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அகிலஉலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார். 25 வருடங்களுக்கு முன் […]
