Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… “இனியும் பொறுக்க மாட்டார்கள்”… மத்திய அரசை எச்சரிக்கும் கமல்ஹாசன்….!!!

தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் வாள்… மிரட்டலான லுக்கில் கமல்… தெறிக்கவிடும் ‘விக்ரம்’ பட புதிய போஸ்டர்…!!!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Keep inspiring us sir 🙏#62YearsOfKamalism […]

Categories
சினிமா

Exclusive: பிக்பாஸ் சீசன் 5 தமிழ்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன் முடிந்து உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, தர்ஷா, ஆர் ஜே வினோத், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது சீசனுக்கான லோகோ, […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை வேடம் ஏற்றவனிடமே… இரட்டை வேடமா…? கமல்ஹாசன் கேள்வி…!!!

இரட்டை வேடம் ஏற்றவனிடமே இரட்டைவேடம் போடுகிறீர்களா என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இரட்டைவேடமேற்று […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம் நடத்த கோரி…. ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு….!!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. அதன்படி, கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்துள்ளார்.  அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவியை போற்றிய கமல்ஹாசன்… எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நிலச்சரிவில் கோபிகா என்ற மாணவி தனது தாய் தந்தை உள்ளிட்ட 24 உறவினர்களை இழந்து தவித்து வந்தார். அப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் மனதில் வைக்காமல், உறுதியுடன் செயல்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏ பிளஸ் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை குறிப்பிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாய் தந்தை இழந்த அந்த மாணவி […]

Categories
மாநில செய்திகள்

சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி… கமல்ஹாசன் டிவிட்…!!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கப்பட்டது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘‘மருத்துவப் படிப்பிற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் “விக்ரம்”…. இணைந்த முன்னணி நடிகரின் மகன்….!!!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் மற்றொரு முன்னணி நடிகரின் மகன் இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரின் மகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குருநாதரின் மகளையே காக்க வைத்த கமலஹாசன்…. பிரபல தயாரிப்பாளர் பேச்சு…!!!

பிரபல தயாரிப்பாளர் கமலஹாசனை பற்றி எதிர்மறையான செய்திகளை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குனராக, பாடலாசிரியராக, பாடகராக, நடன கலைஞராக இது மட்டுமன்றி அரசியல்வாதியாகவும் இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். இத்தனை திறமை கொண்ட இவரை பலர் பாராட்டினாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் கமல்ஹாசனைப் பற்றி பல எதிர்மறையான செய்திகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கமல்ஹாசன் தொட்ட காரியம் எதுவும் வெற்றி பெற்றதில்லை. இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கமல்ஹாசனின் புதிய படம் இதோ…. புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள்….!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள விக்ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்கள் பகத் பாசிலின் புதிய திரைப்படத்தை பார்த்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்கள். இதற்கிடையே பகத் பாசில் நடிப்பில் மாலிக் என்னும் புதிய திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பகத் பாசில் நடித்த மாலிக் திரைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் மற்றும் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் […]

Categories
விளையாட்டு

இந்தியாவிற்கு முதல் பதக்கம்… மீரா பாய் சானுக்கு கமல் வாழ்த்து…!!!!

ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உடனே வழங்க….. கமல்ஹாசன் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்த ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் வேண்டும்…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.தமிழ் மொழிக்கென தனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படப்பிடிப்பில் பள்ளி மாணவராக மாறினேன்… கமல்ஹாசன் டுவிட்…!!!

விக்ரம் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் கமலுடன் நடிக்க உள்ளனர். நேற்றைய படப்பிடிப்பில் கமல் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு விலையுயர்வு…. கமல்ஹாசன் கடும் விமர்சனம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் முதல் சமையல் எரிவாயு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்வோம்…. கமல்ஹாசன் சூளுரை…!!

மக்கள் நீதி மைய கட்சியில் சதிகாரர்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா…. கமல்ஹாசன் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான செல்போன், இணைய வசதி உள்ளிட்டவை இல்லாமல், கிராமப்புற, விளிம்புநிலை மாணவர்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பாபநாசம்2” உருவாக்குமா….? கமல்ஹாசன் ஆலோசனை….!!!

பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மலையாளத் திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தினை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். அதேபோல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருகின்றனர். திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். அதே போல் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பியின் பிறந்தநாள்…. நெருங்கிய நண்பர் கமல் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு….!!!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பரான கமலஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமலஹாசன் தனது நெருங்கிய நண்பரும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நண்பருக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவின் மனைவி மறைவு…. கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்….!!!!

திமுகவின் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் மனைவிபரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலிருந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை…. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!!

உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கௌதம் மேனனின் தந்தை ஒரு காட்சியில் நடித்துள்ள தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு கமல் வரவேற்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிகாக கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் இவ்வளவா….!!! வெளியான புதிய தகவல்…!!!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்  வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கமலஹாசன் இந்நிகழ்ச்சிக்காக 50 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைய வேண்டும்…. கமல்ஹாசன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் தலைமையில்…. சினேகனுக்கு திருமணம்…. தீயாய் பரவும் தகவல்….!!!

பாடலாசிரியர் சினேகனுக்கு கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள பல ஹிட் பாடல்களை எழுதிய சினேகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் கவிஞன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்…. கமலுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படப்பிடிப்புக்கு சென்று ரஜினி சர்ப்ரைஸ்…. வைரலாகும் அரிய புகைப்படம்…!!!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நேரத்தில் இரண்டு…. கமல்ஹாசனின் புதிய திட்டம்…. வெளியான தகவல்…!!!

முன்னணி கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரிடம் இந்தியன்2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. நடிகர் கமல் இந்தியன்2 படத்தில் நடித்து வந்தபோது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக வும், அவர் அரசியலில் சற்று பிஸியாக இருந்த இதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் […]

Categories
மாநில செய்திகள்

கமலுக்கு தான் அருகதை உள்ளது… டாக்டர் சந்தோஷ் பாபு கருத்து…!!!

தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தருமாறு அருகதை தலைவர் கமலஹாசனுக்கு மட்டுமே உள்ளது என்று டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தின் உருவாக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஐஎஸ் பதவியை தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்தவன் நான் என டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தரும் அருகதை தலைவர் திரு கமலஹாசனுக்கு மட்டுமே இருக்கின்றது நான் அவரோடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: களையப்பட வேண்டிய முதல் துரோகி… சற்றுமுன் கமலஹாசன் பரபரப்பு அறிக்கை…!!

மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகிய நிலையில் கமலஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகுவதாக கூறியிருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ” சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களை எடுங்கள் என்பதுதான் அனைவரின் […]

Categories
மாநில செய்திகள்

அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து… வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்… வெளியான புகைப்படம்..!!

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

என்னுடைய தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்…. ஸ்ருதிஹாசன் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல…. மனப்பூர்வமான பாராட்டுக்கள்…. கமல் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கமலஹாசனை வீழ்த்தினார் வானதி ஸ்ரீனிவாசன்… சொற்ப வாக்குகளில் வெற்றி…!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
மாநில செய்திகள்

தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்… இறந்த பின்னும் வேதனை தரும் செய்தி…!!

கமலுடன் நடிப்பது தனது ஆசை எனக்கூறிய விவேக் இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது அவர் இறந்து விட்டதன் காரணமாக அந்தபடத்தில் இருந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல…. கமல்ஹாசன் ட்விட்..!!

நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

கமல் தனது குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்…!!!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலுக்கு இடையூறாக இருந்தால்… சினிமாவை விட்டு விடுவேன்… கமல்ஹாசன் அறிவிப்பு.!!

அரசியலுக்கு இடையூறாக சினிமா இருந்தால் அதை விட்டு விடுவேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டிபோட்டு இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். நாளை பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் என் சினிமா வாழ்க்கை அரசியலுக்கு இடையூறாக இருந்தால் அவற்றை விட்டு விடுவேன் என மக்கள் நீதி மையம் கட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு இந்த விருது 100% பொருந்தும்… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு 100 சதவீதம் பொருந்தும் என்று கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இதனை நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது […]

Categories
மாநில செய்திகள்

“லிப்” சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர் கமலஹாசன்…. வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

லிப் சர்வீஸ் மட்டும் செய்து வருபவர் கமலஹாசன் என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகின்றார். அங்கு பிரச்சாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் இந்தியன் தாத்தா… கமல்ஹாசன் சூசகமாக எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சிறுவர்களுக்கு நான் ஒரு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவாதம் செய்ய நாங்க தயார்… அதற்கு ஏற்பாடு செய்ய நீங்க தயாரா…? கமல்ஹாசன் அறிக்கை..!!

மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்து இருந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்திருந்தார். இந்நிலையில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் சாடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போடுங்கம்மா ஓட்டு… டார்ச் லைட்… சின்னத்தை பார்த்து…!!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுகாசினி தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்நாள் முழுவதும் இலவசம் சோறு போடாது… அது ஒருநாள் விருந்து மட்டுமே… கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து மட்டுமே அது வாழ்நாள் முழுவதும் சோறு கூடாது என கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த தாடியா?… அந்த தாடியா?…. நான் கேட்கிறேன்… கமல்ஹாசன் சூளுரை…!!!

லேடியா அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப் போல அந்த தாடியா, இந்த தாடியா என நான் கேட்கிறேன் என கமல் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன்…!!!

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமல் கூறியுள்ளதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

” அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… கமலின் கருத்துக்கு வழுக்கும் கண்டனம்…!!

அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடன் இல்லாத தமிழகம்… நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு… கமல் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு நடத்தப்படும் என கமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories

Tech |