இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் நெல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிர்களை நாட்டு விதைகளை பாதுகாப்பதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலா பூஜாரி பத்மஸ்ரீ விருது பெற்றார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கமலா பூஜாரியின் உடல்நிலையே அறிய ஆட்சியர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து கேட்டறிந்தார். […]
