நீலகிரி மாவட்டம் உதகை அருகில் உள்ள கேத்தி கிராமத்திலுள்ள அச்சனக்கல் பகுதியில் ரவீந்திரநாத் என்பவர் வசித்துவருகிறார் . இவரது மனைவிமாலதி. இந்த தம்பதியின் மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் ரவீந்திரநாத் பணியாற்றியுள்ளார். பணி மாறுதலாகி செல்லும் இடங்களுக்கு மகள் மீராவையும் அழைத்துச்சென்று, அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க வைத்துள்ளார். கோவையில் ரவீந்திரநாத் பணிபுரிந்தபோது, அங்குள்ள தனியார் பொறியியல் […]
