இலங்கை கடற் பகுதியில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]
