கபடி வீரர் ஆடுகளத்திலேயே திடீரென சுரண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கீழக்குப்பம் மற்றும் பெரியபுறங்கணி அணிகள் மோதின. இதில் பெரியபுறங்கணி அணியில் இருந்த விமல்ராஜ் என்பவர் ரெய்டு சென்றுள்ளார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். […]
