உத்தரபிரதேசம் ஷஹாரன்பூரில் கபடி வீரா்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் வெளியாகிய வீடியோவில், அம்பேத்கா் விளையாட்டு அரங்கிலுள்ள கழிவறையில் சாப்பாடு, பூரி வைக்கப்பட்டுள்ளதும், அதனை கபடி வீராங்கனைகள் எடுத்துச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இவ்வீடியோவை பா.ஜ.க பிலிபிட் எம்.பி. வருண் காந்தி பகிா்ந்து “இந்திய விளையாட்டுத் துறையிலிருந்து அரசியல்வாதிகளையும் அவா்களின் நிா்வாகிகளையும் நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தில்லி […]
