சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரகசியமாக செயல்பட்ட குடோனில் ஹசன் 75 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]
