கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அடையாமடையில் 7 செ.மீ ஆணை கிடங்கு மற்றும் குருந்தன்கோடு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியல் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. […]
