பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை பிரச்சாரத்தின் போது பளார் என்று கன்னத்தில் அறைந்த நபருக்கு தற்போது நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரான்சில் உள்ள தன்-ல் ஹெர்மிடகே என்ற நகரில் ஒரு ஹோட்டல் பள்ளிக்கு பிரச்சாரத்திற்காக சென்றிந்த போது ஜனாதிபதியை அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கையும் களவுமாக […]
