பெங்களூருவில் வசித்து வரும் நடிகை சுவாதி கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுவாதிக்கு திடீரென்று பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் அவருக்கு மருந்துக்கு பதிலாக ஊசி செலுத்தியுள்ளார். இதனால் சுவாதியின் முகம் வீங்கி மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
