கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பொதுத்தேர்வு எதிர்நோக்கி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
