ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “99 ஸாங்ஸ்”.இப்படம் தனது கனவு படம் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார். ஏனென்றால் அவர் இப்படத்திற்கு இசை மட்டும் அமைக்கவில்லை. இப்பட கதையை எழுதியவர் இவர்தான். கடந்த 2015 ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே […]
