தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, […]
