தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, […]
