இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வீடுகளின் முன்பு வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் மதியம் தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பொதுமக்கள் ஆயுத பூஜை என்பதால் மார்க்கெட் பகுதிக்கு பூஜை பொருட்கள் வாங்க வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் […]
