கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஒரு […]
