வால்பாறையில் பெய்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி […]
