Categories
உலக செய்திகள்

கனடா: அவமதிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை…. கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்….!!!!

கனடாநாட்டின் ஓன்டோரியா நகரில் விஷ்ணுமந்திர் எனும் இடத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலையானது இருக்கிறது. இந்நிலையில் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து டொரோன்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காழ்புணர்ச்சியின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெறுக்கத்தக்க குற்றச்செயல் கனடாவில் வாழும் இந்திய மக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது. இது பற்றி உடனே விசாரணை […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா வைரஸ்…. கனடாவில் 5 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் ஐந்து நபர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய வகையான பிஏ.2.75, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவியது. இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா கனடா நாட்டிலும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கனடா நாட்டின் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, கனடாவில் கடந்த 6-ஆம் தேதி தொடக்கத்தில் 5 நபர்கள் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

தம்பதியின் அனுமதியின்றி… வித்தியாசமான பிரசவம்…. குழந்தை பரிதாப பலி…!!!

கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான். அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவுகிறேன்”….. எலான் மஸ்க் டுவிட் பதிவு…. !!!!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிய ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர்கள் ஐஎஸ்டி வில்சன் எலாஸ் மஸ்க்கின் மூலம் 5 குழந்தைகளை பெற்று உள்ளார். அதன்பிறகு கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்று உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்து உள்ளனர். மஸ்க்கிற்கு […]

Categories
உலக செய்திகள்

மயக்கமடைந்த நீச்சல் வீராங்கனை… உடல் முழுக்க காயங்கள்…. என்ன நடந்தது?..

கனடா நாட்டை சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனைக்கு யாரோ மயக்கம் மருந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்ததாக கூறியிருக்கிறார். புதாபெஸ்ட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 22 வயதுடைய Mary-Sophie Harvey என்ற வீராங்கனை சென்றிருக்கிறார். அப்போது, போட்டியின் கடைசி நாளில் அவர் திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார். கண்விழித்த உடன் தான் படுக்கையில் இருந்ததாகவும், குழுவின் மேலாளர் மற்றும் மருத்துவர் இருந்ததை பார்த்தவுடன் திகைத்து போனதாகவும் கூறியிருக்கிறார். சுமார் 6 மணி நேரங்களாக […]

Categories
உலக செய்திகள்

ரூ. 1 கோடி மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள்…. குப்பைத் தொட்டியில் போட்ட கனடா… எதற்காக தெரியுமா…?

பிரபல நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர். கனடா நாட்டில் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1.36 கோடி ரூபாய் ஆகும். இந்த தடுப்பூசிகள் வெவ்வேறு தடுப்பூசிகளின் பயன்பாட்டின் காரணமாக கனடா நாட்டில் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதன் பிறகு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டது. இதன் காரணமாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து வாங்கிய தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டது. இதன் காரணமாக தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணைய… பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கனடா ஆதரவு…!!!

ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முதல் நாடாக கனடா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் திடீரென்று நுழைந்த ரஷ்யபடைகள் அங்கு நான்கு மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கும் அவ்வாறான நிலை உண்டாகலாம் என்று ஸ்வீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர தீர்மானித்தன. எனினும் அதற்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 30 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான், நேட்டோ அமைப்பில் எந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனடா: தாடி வைக்கக்கூடாது என்ற ரூல்ஸால் வேலை இழந்தோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கனடாவின் ரொரன்றோ நகரில் பாதுகாவலர்களாக பணியாற்றுவோர் தாடி வைத்துக்கொள்ளக் கூடாது, முழுமையாக முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதைத் அடுத்து சீக்கிய பாதுகாவலர்கள் பல பேர் வேலை இழந்தனர். சீக்கியர்களைப் பொருத்தவரையிலும் அவர்கள் தாடியை மழிக்கக்கூடாது, முடிவெட்டிக்கொள்ளக்கூடாது என மதரீதியாக அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தாடி வைத்திருப்போர் N95 வகை மாஸ்குகளை அணிவது கடினம் ஆகும். எனவே தாடி வைத்திருப்பவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க N95 மாஸ்க் அணிய முடியாது என்பதால் இந்திய சீக்கியர்கள் முதலானவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்… பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் பலி…!!!

கனடா நாட்டில் பேருந்தில் ஒரு நபரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் மீது திராவகம் வீசிய மர்ம நபர், தீ வைத்து எரித்தார். இச்சம்பவம் சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

கனடா: தாறுமாறாக ஓடிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்….. பெரும் சோகம்…..!!!!

கனடாவில் வாகன விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். Ottawaவில் தான் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இருநாட்களுக்கு முன் all-terrain வாகனத்தில் இளம்பெண் சென்ற நிலையில் வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. ஒருக்கட்டத்தில் வேகமாக மரத்தின் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மற்றொரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டதாக தெரியவந்து உள்ளது. இதில் காயமடைந்தவருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலையை கண்டறிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வாழும் 2 இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவம்…. உயரிய விருதை வழங்கிய அரசு…!!!

கனடா அரசு, தங்கள் நாட்டில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு உயரிய கவுரவ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களான பர்மிந்தர் ரெய்னா, அஜய் அகர்வால் ஆகிய இருவருக்கு Order of Canada என்ற உயரிய கௌரவ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை 1967 ஆம் வருடத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார். இந்த உயரிய கௌரவ விருதானது, சமுதாயத்திற்கான சேவைகள் மற்றும் கற்பனைகளை உண்மையாக்கும் கண்டுபிடிப்புகள், சமூகத்தை ஒன்றிணைக்கும் இரக்கம் உடையவர்களை பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

நிலப்பரப்பில் திடீரென ஏற்பட்ட சூறாவளி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

கடற்கரை பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறாவளி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கனடா நாட்டிலுள்ள சஸ்காட்சுவான் பகுதியில் ஒரு கடற்கரை அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் வானிலை மாற்றத்தின் காரணமாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. அந்த சூறாவளி ஆனது பார்ப்பதற்கு ஒரு குறுகிய கயிறு வடிவத்தில் புனல் போன்று காட்சி அளிக்கிறது. இந்த சூறாவளி ஆனது நிலப்பரப்பில் தோன்றியுள்ளது. இந்த சூறாவளியை கடற்கரையில் நின்ற சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை டாக்லஸ் தாமஸ் என்பவர் […]

Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் […]

Categories
சினிமா

பாலியல் வழக்கு: ஆஸ்கார் விருது வாங்கிய டைரக்டர் கைது…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கனட நாட்டில் வசித்து வரும் பால்ஹக்கீஸ் (69) என்பவர் சென்ற 2006ஆம் வருடம் கிராஷ் எனும் திரைப்படத்தில் சிறந்த திரைக் கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றார். இவர் சென்ற செவ்வாய்கிழமை இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொள்ள சென்றார். அங்கு சுற்றுலா நகரமான புக்லியாவுக்கு அருகிலுள்ள ஒஸ்துனியாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். இதற்காக அவர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஒரு இளம்பெண்ணை, பால் ஹக்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதாவது வெளிநாட்டை […]

Categories
உலக செய்திகள்

பேருந்தில் பெண் மீது தீ வைத்த நபர் கைது…. விரோதச் செயல் குற்றச்சாட்டு…!!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் நின்ற பெண் மீது மர்ம நபர் தீ வைத்த சம்பவத்தில் அவர் மீது விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஒரு நபர் திடீரென்று திரவத்தை ஊற்றியதோடு, நெருப்பு வைத்தார். இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

சாலையில் தனியாக சென்ற பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம் …. சி.சி.டி.வி.யில் சிக்கிய வாலிபர்…. கனடாவில் பரபரப்பு …..!!!!!

கனடா சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது இது குறித்த முக்கிய சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் ரொறன்ரோவில் கடந்த 1 ஆம் தேதி நேர்ந்துள்ளது. அதாவது அன்றைய தினம் பே தெருவுக்கு வருமாறு காவல்துறையினருக்கு அவசர தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 33 வயதான பெண் தனியாக நடந்து சென்றபோது ஒரு நபர் அவரை அணுகியுள்ளார். அதன்பின் அப்பெண் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கர தீ விபத்து… இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்…!!!

கனடாவில் உள்ள ஹமில்டன் நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருக்கும் ஹமில்டன் கிங்ஸ் தெருவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் சுகாதார தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.  அந்த வர்த்தக கட்டிடதின் அதிகமான பகுதிகளை பலகையால் தயாரித்துள்ளனர். இந்நிலையில், அந்த கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து அதிவேகத்தில் பரவியது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பெரும் […]

Categories
உலக செய்திகள்

ரொறன்ரோவில் பயங்கரம்… பேருந்தில் இருந்த பெண் மீது நெருப்பு வைத்த நபர்…!!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர் பெண் மீது நெருப்பு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர், பெண் ஒருவர் மீது திடீரென்று ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த நபர் நெருப்பு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனடா: இந்திய மாணவன் சுட்டுக்கொலை…. பின்னணி என்ன?… கண்ணீர் மல்க பெற்றோர் வேதனை….!!!!!

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காததால் தாங்கள் தினசரி செத்துக் கொண்டிருப்பதாக அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி Seneca கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் வாசுதேவ் (21) பகுதிநேர பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ரொரன்றோவில் உள்ள Sherbourne சுரங்க ரயில் நிலையத்துக்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்தப்பட இருக்கும் தாய் மற்றும் மகள்…. ஆதரவின்றி தவிக்கும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!

தாய் மற்றும் மக்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். கனடாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தற்காலிக வெளிநாட்டு பணியாளராக எவாங்க்ளின்‌ என்ற பெண்மணி சென்றுள்ளார். இவர் வேலையில் இருந்த போது 2 பேர் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அவர்கள் தன்னை பழி வாங்குவதற்காக  திருட்டு பழி சுமத்தியுள்ளதாக எவாங்க்ளின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த திருட்டு நடந்த போதுதான் கனடா நாட்டில் இல்லை என்றும், தான் ஒரு […]

Categories
உலக செய்திகள்

கனடா நாட்டின் அதிபருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

கனடா நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கனடா நாட்டின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா‌‌ தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். I’ve tested positive for COVID-19. I’ll […]

Categories
உலக செய்திகள்

ஓவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம்…. கனடா அரசு அதிரடி முடிவு….!!!!!!!

சிகரெட் மீதான எச்சரிக்கை வாசகத்தை பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது. கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை தடை ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட்  செய்தியாளர்களிடம் பேசும்போது, புகையிலைப் பொருட்களில்  தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கை விடுப்பது என்பது  அத்தியாவசிய தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. “பறக்கும் அனுபவத்தை பெரும் பயணிகள்”… புதுவித படகு…. அறிமுகப்படுத்திய கனடா…!!!!!!!!

உலகின் முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புகை வெளியிடாத ஒலி எழுப்பாத விதமாக தயாரிக்கப்பட்டுள்ள. இந்த நவீன படகில் 6 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் அதிவேகத்தில் செல்லும்போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.

Categories
உலக செய்திகள்

கைத்துப்பாக்கி வைப்பதற்கான உரிமை முடக்கம்…. எதற்காக தெரியுமா?…. கனடா அரசு அதிரடி…..!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பள்ளியில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா். அதாவது உவால்டே நகரில் ரோப் எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கிசூடு சம்பவம் உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்தநாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பரபரப்பு…. “துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்”… போலீசாரின் அதிரடி முடிவு …!!!!!!

கனடாவில் தொடக்கப் பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடனமாடிக்கொண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி 19 சிறுவர்கள் உட்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் டொரண்டோ நகரில் ஒரு தொடக்க பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா….! பரவி வரும் குரங்கு காய்ச்சல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரபல நாட்டில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் 16 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இந்தக் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு  உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார துறை  தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதார முகாம்  சிறிய அளவில் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கடும் சூறாவளி புயல்… 8 நபர்கள் உயிரிழப்பு…. இருளில் தவிக்கும் 2 லட்சம் மக்கள்…!!!

கனடா நாட்டில் கடும் சூறாவளி புயலில் சிக்கி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக், ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி புயல் ஏற்பட்டது. இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியிருக்கிறது. இதனால் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், இதில் சிக்கி 8 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் நாட்டிற்குள் நுழைய தடை…. கனடா அரசாங்கம் அறிவிப்பு…!!!

கனடா அரசாங்கம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினையும், அந்நாட்டு ராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் வர தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், ராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய அதிபர் புதின்”… கனடாவில் நுழைய தடை விதித்து மசோதா…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ரஷ்ய அதிபர் புதினும், அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேரும் தங்களது நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா அரசானது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைவதற்கு கனடா தடை விதித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரியான மார்கோ மென்டிசினோ கூறியிருப்பதாவது “உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிராக… தாவர தடுப்பூசி தயாரிப்பு…. அசத்திய கனடா ஆய்வாளர்கள்…!!!

கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான தாவர அடிப்படைக்கொண்ட தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறார்கள். கனடாவில் மெடிகாகோ என்னும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்கொரோனாவிற்கு எதிரான தாவர அடிப்படை உடைய தடுப்பூசியை தயாரித்திருக்கிறார்கள். தடுப்பூசியின் சிறப்பான செயல்பாட்டிற்காக, ஏஎஸ் 03 என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனையானது சுமார், 24,141 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த தாவர தடுப்பூசியானது, ஐந்து விதமான உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ்களை எதிர்த்து 69.5% செயல் […]

Categories
உலகசெய்திகள்

எந்த டென்ஷனும் இல்லாம இருக்கணுமா….. உலகிலேயே தனிமையான வீடு…..  எவ்வளவு விலை தெரியுமா?…!!!!

உலகிலேயே தனிமையான வீடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். டிராபிக் ஜாம், ஒர்க்கு பிரஷர், டென்ஷன் என எதுவும் இல்லாமல் தனியாக இருக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு. கடலுக்கு நடுவே சிறிய தீவில் குட்டியாக வீடு கட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வீடு ரியல் எஸ்டேட் இணையதளமான Zillow தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கனடா எல்லைக்கும் அகாடியா தேசிய பூங்காவுக்கும் இடையே உள்ள டக் லெட்ஜஸ் தீவில்தான் இந்த வீடு […]

Categories
உலக செய்திகள்

பெண் தேடி ஏமாந்துபோன கனடா வாழ் தமிழர்…. எப்படின்னு தெரியுமா?… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(42). எம்.பி.ஏ பட்டதாரி ஆன இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவர் வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பச்சையப்பன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இதையடுத்து பச்சையப்பன் 2-வது திருமணம் செய்துகொள்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நிரபராதி மீது பொய் வழக்கு…!! 14 வருட சிறை சித்திரவதை…!! கனடா வழங்க உள்ள நஷ்ட ஈடு என்ன..??

கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi. இவர் மொரிட்டானியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவரை திடீரென கனட உளவு அமைப்பு ஒருநாள் கைது செய்து CN Tower மீது குண்டு வைக்க முற்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளது. ஆனால் Mohamedou கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவுக்கு வந்ததாகவும் சிஎன் டவர் என்றால் என்ன என்று கூட தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னை தீவிரவாதி என முத்திரை குத்தி அமெரிக்காவிடம் […]

Categories
உலக செய்திகள்

கனடா: திடீரென மாயமான 5 வயது சிறுவன்…. கவலையில் பெற்றோர்…..!!!!!!

கனட நாட்டில் Red Earth Cree Nation என்ற பூர்வக்குடியின பகுதியைச் சேர்ந்த Frank Young என்ற 5 வயது சிறுவன் கடந்த செவ்வய்க்கிழமை அன்று மாயமானார். அதாவது  Carrot River எனும் நதியின் அருகில் தனது வீட்டின் முன் அமைந்துள்ள புல்வெளியில் விளையாடிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளார். இதனால் Saskatchewan மற்றும் மனித்தோபாவில் உள்ள மக்கள் உட்பட 9 தன்னார்வலர்கள் குழுக்கள் Frankஐத் தேடி வருகின்றனர். எனினும் Frank காணாமல்போய் 4 நாட்கள் ஆகிவிட்ட சூழ்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பள்ளி மாணவன் கொடூரக்கொலை….!! 7 சிறார்கள் கொண்ட கும்பல் கைது…!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ படையினர் பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கினர். உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போர் தாக்குதலின்போது ரஷ்ய வீரர்களால் உக்ரைனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி உக்ரைனில் 17 வயது சிறுமி ஒருவர் அவருடைய தாயார் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வசித்து வரும் உக்ரைனை சேர்ந்தவர் வீட்டிற்கு தீவைப்பு….!! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

பிரிட்டிஷ் நாட்டின் விக்டோரியாவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் பாதிரியார் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென பாதிரியாரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. வீடு மரத்தாலானது என்பதனால் மளமளவென தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து பாதிரியாரின் மனைவி ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்து படுக்கைக்கு வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது வீடு பற்றி எரிவது கண்டு […]

Categories
உலக செய்திகள்

நடமாடும் நகைக் கடையான பிரபல ரவுடி கனடா தப்பியோட்டம்….!! கூட்டாளிகள் கைது…!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ்தீப் சிங் ஒரு ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியவன். இந்த பயங்கரவாதி பஞ்சாபில் நடைபெற்ற சில பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்தீப் சிங் இந்தியாவில் இருந்து தப்பி கனடாவில் தலைமறைவாக வாழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கனடாவில் ஹர்ஷ்தீப் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹர்தீப் சிங்கின் உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை […]

Categories
உலக செய்திகள்

ரயில் பாதையில் ஜாகிங் சென்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

கனடா நாட்டில் ரயில் பாதையில் ஜாகிங்சென்ற நபர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்கரியில் நேற்று மதியம் 1:00 மணியளவில் ஒருவர் ரயில் பாதையில் ஜாகிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளதால் மக்கள் அவரை எச்சரிக்க குரல் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் அதனை கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த அந்த ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். அந்த நபர் தன் காதுகளில் இயர்போன் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்…. பள்ளி பேருந்து விபத்து… 13 வயது சிறுமி பலி….!!!

கனடாவில் பள்ளி பேருந்து விபத்தில் 13 வயது சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் New Brunswick என்ற பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி பள்ளி பேருந்து விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தின் மீது வேறு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது […]

Categories
உலக செய்திகள்

67 வயதில் கனேடிய பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. இவ்வளவு தொகையா..?

கனடாவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் மிகப்பெரிய தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது. கனடாவில் இருக்கும் North Bay என்னும் பகுதியில் வசிக்கும் 67 வயதான Sherry Forsman என்ற பெண்ணிற்கு 4 மகள்கள் மற்றும் 6 பேரக் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவருக்கு தற்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதாவது, லாட்டரியில் சுமார் 10,00,000 டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. முதலில், அவர் சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். மேலும் இந்த பரிசுத்தொகையை தன் மகள்களுக்கு பிரித்து கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

கனடா எல்லைக்குள் புகுந்த நபர்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

சட்டவிரோதமாக கனடா எல்லைக்குள் புகுந்த ஒருவரை விரைந்து பிடித்த கனேடிய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி JohnWright எனும் அமெரிக்கர், கனடா எல்லைக்குள் நுழைந்து உள்ளார். இதையடுத்து விரைவாக அவரைக் கைது செய்த கனேடிய காவல்துறையினர் அவரது உடைமைகளை சோதனையிட்ட போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, குண்டுகள் நிரப்பப்பட்ட 3 துப்பாக்கிகள் மற்றும் stun gun ஒன்றும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்…. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்….!!!!

கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

இதனை உண்ணாதீர்கள்…. வைரஸ் பரவுகிறது…. அமெரிக்காவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!

கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பி உணவின் மூலமாக வைரஸ் பரவியதால் அதை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதியில் சேகரிக்கப்பட்ட Oysters என்ற சிப்பி உணவில் Oysters என்ற வைரஸ் உள்ளது என்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. கனடாவில் தயாரிக்கப்பட்ட அந்த சிப்பி உணவானது, அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அது உயிருக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG….!! கனடாவில் சுட்டு கொள்ளப்பட்ட இந்திய மாணவர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கனடாவில் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை. டொரண்டோவில் உள்ள கல்லூரியில் உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் மேலாண்மைதுறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் Sherboune சுரங்க ரெயில் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று எதிர்பாராத விதமாக கார்த்திக் வாசுதேவ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உயிரிழந்து விட்டதாக கனடா விற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை…. பிரபல நாட்டில் அரசின் அதிரடி முடிவு….!!!!

கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா அரசு வீடுகள் விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையை குறைக்கும் விதமாக கனடாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவில் 2 வருடங்களுக்கு வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடையுடன், தங்கள் வீட்டை ஓராண்டுக்குள் விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், நிரந்தர உரிமம் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!…. கனடாவில் பரவும் “ஜாம்பி” நோய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

“ஜாம்பி” என்ற வகை நோய் பற்றி ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். ஜாம்பி நோய் ஒவ்வொரு மனிதராக பரவி பேய் பிடித்தவர்கள் போல அவர்களை நடந்து கொள்ள வைக்கும். சமீபத்தில் இப்படியான ஒரு வியாதி பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனடாவில் Chronic Wasting Disease (CWD) என்ற நோய் மான்களுக்கு இடையே பரவி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாஸ்கட்ச்வான், அல்பெர்டா உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செல்லும் மக்கள் கவனமாக இருங்கள்… கனடா அரசு அறிவுறுத்தல்…!!!

நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கின்றன. கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் சமீபத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உள்ளூர் அதிகாரிகள் வாரன்ட் இன்றி பொது மக்களை கைது செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இதனால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த பேரணி அமைதியாக சென்ற நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முயன்றதால் வன்முறை […]

Categories
உலக செய்திகள்

காதலர்கள் வலையில் மாட்டி கொண்ட டைனோசர் மீன்…. வெளியான புகைப்படம்…..!!!!!

கனடாவில் பொழுதுபோக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடையுள்ள வாழும் டைனோசர் என்று அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது. கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியில் பிரேடன் ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொழுதுபோக்குக்காக ஆல்பர்ட்டா பகுதியிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது வலையில் 8 அடி நீளமுள்ள மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது. இதையடுத்து அவர் உடனே அதனை வெளியே எடுக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் அந்த […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை தேசிய கீதம்…. அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்… வெளியான வீடியோ…!!!

கனடாவில் வசிக்கக்கூடிய இலங்கையை சேர்ந்த மக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் […]

Categories

Tech |